திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 829 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 78 | சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே | பதவுரை Show / Hideநீர், Neer - திருப்பாற்கடலிலே அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே கிடந்த, Kidandha - கண் வளர்ந்தருள்கிற நின்மலன், Ninmalan - அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய நலம் கழல், Nalam Kazhal - நன்மைபொருந்திய திருவடிகளை ஆர்வமோடு, Aarvamodu - அன்புடன் இறைஞ்சி நின்று, Irainji Nindru - அச்ரயித்து சோர்வு இல்லாத காதலால், Soarvu Illadha Kaadhalal - விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு துடக்கு அது மனத்தர் ஆய், Thudakku Adhu Manaththar Aay - விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய் வாரம் ஆக, Vaaram Aaga - இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள் வானம் ஆன, Vaanam Aana - பரமபதத்தை ஆள்வதற்கு வல்லர், Vallar - ஸமர்த்தராவர். |