திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 814 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 63 | நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே | பதவுரை Show / Hideநன்று இருந்து, Nandru Irundhu - (யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து யோகம் நீதி, Yogam Neethi - யோகமாகியு உபாயத்தை நண்ணுவார்கள், Nannuvargal - ஸாதிக்கின்ற யோகிகளுடைய சிந்தையுள், Sindhaiyul - ஹ்ருதயத்தினுள்ளே சென்று இருந்து, Senru Irundhu - ப்ரவேசித்திருந்து ஊரகத்தும், Ooragaththum - திருவூரகத்திலும் வெஃகனை, Veghkanai - திருவெஃகாவிலும் தீ வினைகள் தீர்த்த, Thee Vinaigal Theertha - (அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின தேவ தேவனே!, Deva Devaney - தேவாதி தேவனே! குன்று இருந்த நீடு மாடம், Kundru Irundha Needu Maadam - மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய பாடகத்தும், Paadakaththum - திருப்பாடகத்திலும் இருந்து நின்று கிடந்தது, Irundhu Nindru Kidandhadhu - (க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸௌஹார்த்தமோ! |