திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 807 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 56 | இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற்காலத்தில் இலங்கை மன்னன், Ilankai Mannan - இராவணனுடைய ஐந்தொடு ஐந்து, Aindodu Aindhu - பத்தாகிய பை தலை, Pai Thalai - வலிய தலைகள் நீலத்து உலக, Neelathu Ulaga - பூமியிலே விழுந்தொழியவும் கலங்க, Kalanga - (அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும் சென்று, Sendru - இலங்கையிற் புகுந்து கொன்று, Konru - (அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து வென்றி கொண்ட, Vendri Konda - விஜயம் பெற்ற வீரனே, Veerane - மஹாவீரனே! விலக்கு நூலர், Vilakku Noolar - உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும் வேதம் நாவர், Vedham Navar - வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும் நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - (நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள். வலம் கொள, Valam Kola - வழிபாடுகள் செய்யும்படியாக குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருளா நின்ற மாலும் அல்லையே, Maalum Allaiye - ஸர்வேச்வரனும் நீயன்றோ |