திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 799 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
799ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 48
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண் ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய் நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே
பதவுரை Show / Hide
குன்றில் நின்று, Kunril Nindru - திருவேங்கடமலையில் நின்றும்
வான் இருந்து, Vaan Irundhu - பரமபதத்தில் வீற்றிருந்தும்
நீள் கடல் கிடந்து, Neel Kadal Kidandhu - பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும்
மண் ஒன்று சென்று, Man Onru Sendru - இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும்
ஒன்று அதை உண்டு, Onru Athai Undu - மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும்
ஒன்று அது பன்றி ஆய் இடந்து, Onru Athu Panri Aay Idandhu - மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும்
கன்று சென்ற நாள் அவற்றுள், Kandru Senra Naal Avattrul - கன்றாய் சென்ற நாட்களிலே
நல் உயிர் படைத்து, Nal Uyir Padaithu - நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும்
அன்று, Andru - அப்போது
அவர்க்கு, Avarkku - அந்த மனிதர்கட்கு
தேவு, Devu - (தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து, Amaiththu - ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த, Alitha - நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே, Aadithevan Illaiye - பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு, Paatu - மன்னுமாமலர்