திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 797 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
797ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 46
தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய் கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால் நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
பதவுரை Show / Hide
தோடு பெற்ற, Thodu Petra - இதழ்களையுடைய
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையானது
ஆடு, Aadu - விளங்கப்பெற்ற
சென்னியாய், Sennyai - திருமுடியையுடைவனே!
கோடு, Kodu - ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை
பற்றி, Patri - தரித்து
ஆழி, Aazhi - திருவாழியாழ்வானை
ஏந்தி, Aendhi - ஏந்திக்கொண்டு
அம் சிறைபுள், Am Siraipul - அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை
ஊர்தி, Oorthi - வாஹகமாக நடந்தாநின்றார்;
நாடு பெற்ற நன்மை, Naadu Petra Nanmai - மற்ற பேர்கள் பெற்ற நன்மையை
கண்ணம் இல்லையேனும், Kannam Illaiyenum - நான் பெற்றிலேனாகிலும்
காயினேன், Kaayinen - நீசனான அடியேன்
வீடுபெற்று, Veedupetru - மோக்ஷத்தைப் பெற்று
இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ, Irappodum Pirappu Arukkum Aa - இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை
சொல், Sol - அருளிச் செய்யவேணும்.