திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 796 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
796ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 45
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பதவுரை Show / Hide
அனந்தன் மேல் கிடந்த, Ananthan Mel Kidandha - திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா, Em Punniya - எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல், Punam Thuzhai Alankal - தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே, Am Punitane - பரமபாவகனே!
மண் உளாய், Man Ulaai - லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய், Vin Ulaai - பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய், Mannul Mayangki Nindru Ennum En Akappadaai - இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர், Nin Thamar - உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய், Kannulai - சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை, Seyai - (மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை, Enna Maayai - இது என்ன ஆச்சரியம்!