திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 795 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 44 | பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே | பதவுரை Show / Hideபாலின் நீர்மை, Paalin Neermai - பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன செம்பொன் நீர்மை, Sembon Neermai - சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, Paasiyin Pasumpuram Polum Neermai - பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை, Porpu Uday Thadathu Vandu Vindu Ulaam Neelam Neermai - அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன. என்று இவை நிறைந்த, Endru Ivai Niraintha - என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை, Kaalam Naankum Aam Maavin Neermai - நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை வையகம், Vaiyagam - இவ்வுலகத்திலுள்ளவர்கள் மறைத்தது, Maraiththathu - திரஸ்கரித்தது என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸ்வபாவம்! |