திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 791 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 40 | ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே | பதவுரை Show / Hideஆனை காத்து, Aanaik Kaathu - கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி அது அன்றி, Adhu Andri - அவ்வளவேயல்லாமல் ஆயர்பிள்ளை ஆய், Aayirpillai Aay - கோபாலகுமாரனாகி ஓர் ஆனை கொன்று, Oru Aanaik Konru - குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று ஆனை, Aanaik - பசுக்களை மேய்த்தி, Meiythi - மேய்த்தருளா நின்றாய்; ஆ நெய், A Ney - பசுக்களின் நெய்யை. உண்டி, Undi - அமுது செய்யா நின்றாய்; அன்று, Andru - இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில் குன்றம் ஒன்றினால், Kunram Ondrinaal - கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு ஆனைக் காட்டு, Aanaik Kaatu - பசுக்களை ரக்ஷித்து மை அரி கண் மாதரார் திறந்து, Mai Ari Kan Matharaar Thirandhu - மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக அன்று, Andru - அக்காலத்திலே முன்சென்று, Munsendru - அவளெதிரே நின்று என்ன மரயம், Enna Marayam - என்ன ஆச்சரியம்! |