திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 787 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
787ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 36
ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச் சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய் தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ
பதவுரை Show / Hide
ஆடகந்தபூண் முலை, Aadakandhapoon Mulai - ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய், Asothai Aaychi Pillai Aayi - யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து, Saadu Uthaithu - சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள், Oru Pulludhu Avi Kalla Thaayapey Maigal - சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட, Veeda - நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த, Vaitha - உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை, Veyya Kongai - (விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால், Aiyya Paal - ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து, Amudhu Seithu - உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர், Aadagam Kai Maathar - பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது, Vaai Amudham Undadhu - அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல், Enkol - என்ன வித்தகம்!