திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 778 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 27 | விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே | பதவுரை Show / Hideவிண் கடந்த சோதியாய், Vin Kadandha Sothiyai - விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே! விளங்கு, Vilangu - ஸ்வயம்ப்ரகாசனான ஞானம், Gnanam - ஜீவாத்மாவை மூர்த்தியாய், Moorthiyai - சரீரமாக வுடையவனே! பண்கடந்த தேசம் மேவு, Pankadandha Desam Mevu - வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய் பாவநாச நாதனே!, Pavanasa Nadane - ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே! எண் கடந்த யோகினோடு, En Kadandha Yoginodu - எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு மாணி ஆய், Maani Aay - வாமனாய் இரந்து சென்று, Irandhu Sendru - (மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று மண் கடந்த வண்ணம், Man Kadandha Vannam - பூமியை யளந்துகொண்ட விதத்தையும் நின்னை, Ninnai - உன்னையும் ஆர் மதிக்க வல்லர், Aar Mathikka Vallar - அளவிடக்கூடியவர்கள் யார்? |