திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 772 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 21 | அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே | பதவுரை Show / Hideகுரங்கை, Kurangai - வானரப்படைகளை ஆள் உகந்த எந்தை !, Aal Ugandha Endhai - உகந்த ஆட்கொண்ட நாயனே! அரங்கனே, Aranganey - ஸ்ரீஅரங்கநாதனே! அன்று, Andru - (துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று தரங்கம் நீர் கலங்க, Tharangam Neer Kalanga - அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும் மா நிலம் குலங்க, Maa Nilam Kulanga - பெரிய பூமியானது குலுங்கவும் மாகணம் நெருங்க கலாய், Makanam Nerunga Kalai - வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி நீ கடைந்த, Nee Kadaindha - (கடலை) நீ கடைந்தருளின காலத்திலே நின்ற, Nindra - அருகே நின்று கொண்டிருந்த சூரர், Soorar - மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள். என் செய்தார், En Seithaar - என்ன காரியம் செய்தார்கள் இது, Idhu - இவ்விஷயத்தை வேறு, Veru - விசேஷித்து தேற, Theera - நான் தெரிந்து கொள்ளும்படி கூறு, Kooru - அருளிச் செய்யவேணும். |