திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 767 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
767ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 16
தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் – நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும் கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே
பதவுரை Show / Hide
தலைக்கணம், Thalaikkanam - முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள், Thugal - க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி, Kuzhambu Saadhi - மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி, Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய், Thotram Aay - திருவவதரித்து
நிலைக்கணகங்கள் காண, Nilai Kaanakangal Kaan - (தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி, Vandhu Nitrri - வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள், Aelum Needu Irum Kalai Kaanangal - நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால், Sol Porulinal - அபிதாநவ்ருத்தியாலும்
கருத்தினால், Karuthinal - தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா, Ninaikka Onna - (உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி, Malai Kaanangal Pol Unarndhum Maatchi - பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே, Nin Than Maatchiye - உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை