திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 766 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 15 | அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே | பதவுரை Show / Hideஅங்கம் ஆறும், Angam Aarum - சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன வேதம்நான்கும், Vedhamnankum - (அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு) ஆகி நின்று, Aagi Nindru - ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே தங்குகின்ற தன்மையாய், Thangugindra Thanmaiyaai - ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே! தடம்கடல், Thadhamkadal - மஹா ஸமுத்திரத்திலே பணம் தலை செம் கண் நாக அணை, Panam Thalai Sem Kan Naaga Anai - படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே கிடந்த, Kidandha - கண்வளர்ந்தருளுகிற மல்குசெல்வம் சீரினாய், Malkuselvam Seerinaai - நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே! சஙக வண்ணம் அன்னமேனி, Sangaka Vannam Annamaeni - சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து) சாரங்கபாணி அல்லையே, Saarangapaani Allaiye - (த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ? |