திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 765 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
765ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 14
தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய் ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின் நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும் சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே
பதவுரை Show / Hide
தூய்மை யோகம் ஆயினாய், Thuymai Yogam Aayinai - ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய், Thuzhai Alangkal Mazhaiyai - திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!, Aamai Aagi Aazh Kadal Thuyindra Aadhitheva - கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம், Nin Naamathayam - உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன, Innadhu Enna - இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும், Vallam Alla Aagilum - யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய, Saama Veda Geethan Aaya - ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே, Sakra Paani Allaiye - கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)