Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 633 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
633நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 7
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே
கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து , Karulan vetri kodiyaan than meedhu aadaa ulagathu - பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில் (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய் , Petra thaai - அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே , Vetra verithe - ஒருவர்க்கும் பயனின்றியே (பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே , Vembu aagave - வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான் , Valarthaan - வளர்த்து வாரா நின்றான்
குற்றம் அற்ற , Kutram atra - (அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை , Mulai thannai - (என்னுடைய) ஸ்தநங்களை
குமரன் , Kumaran - யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு , Kolam panaitholodu - அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே
அற்ற குற்றம் அவை தீர , Atra kutram avai theera - (என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர் , Anaiya amuki kateer - அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்