Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 628 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
628நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 2
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
பால் ஆலிலையில், Paal aalilaiyil - பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட, Thuyil konda - கண் வளர்ந்தருளின
பரமன், Paraman - பெருமானுடைய
வலை, Valai - வலையிலே
பட்டிருந்தேனை, Patirundhenai - அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல், Velaal thunnam peydhal pol - வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே, Venditru elam pesadhe - உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய், Aayan aay - இடைப் பிள்ளையாய்
கோலால், Kolaal - (இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து, Nirai meithu - பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த, Kudandhai kidandha - திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி, Kudam aadi - குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு, Neelaar thanam thuzhaai kondu - பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென், Neri men - நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல், En kuzhalmel - என் கூந்தலிலே
சூட்டீர், Chooteer - சூட்டுங்கள்