திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 605 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
605நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 9
கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே
பதவுரை Show / Hide
கடலே கடலே!, Kadale kadale! - ஓ கடலே!
உன்னை, Unnai - (தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து, Kadainthu - (மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து, Kalakkuruthu - கலக்கி
உடலுள் புகுந்து நின்று, Udalul pugundhu ninru - உனது சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு, Ooral aruthavarku - ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று, Ennaiyum udalul pugundhu ninru - என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற, Ooral arukkinra - என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு, Maayarku - எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம், En nadalaikal ellam - என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே, Naaga anaike - அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று, Sendru - நீ போய்
உரைத்தியே, Uraithiye - சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)