திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 580 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
580நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும் பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
பதவுரை Show / Hide
ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான
இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை
தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும், Naal Thorum - நித்யமும்
என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை
வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில்
திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்