திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 529 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
529நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 6
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
தடம், Thadam - விசாலமாயும்
அவிழ் தாமரை, Avizh thaamarai - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை, Poigai - தடாகத்திலே
தாள்கள், Thaalgal - தாமரைத் தண்டுகளானவை
எம் காலை, Em kaalai - எங்கள் கால்களை
கதுவ, Kadhuva - கடிக்க
விடம் தேள் எறிந்தால் போல, Vidam thel erindhaal pol - விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும், Aatravum - மிகவும்
வேதனை பட்டோம், Vedhanai pattom - வருத்தப் படா நின்றோம்
குடத்தை, Kudathai - குடங்களை
எடுத்து, Eduthu - தூக்கி
ஏற விட்டு, Era vittu - உயர வெறித்து
கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல, Valla - ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து, Paditrai ellaam thavirndhu - (நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய், Engal pattai pani tharulaayi - சேலைகளை கொடுத்தருள வேணும்.