திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 524 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
524நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு
வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை
செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன், Aazhiyan - சூரியன்
எழுந்தான், Ezhundhaan - உதித்தான்
ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம்
இனி, Ini - இனி மேல்
என்றும், Endrum - என்றைக்கும்
தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்
துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்