திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3945 | உபதேச ரத்னமாலை || 61 | ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் | பதவுரை Show / Hideஆசார்ய பக்தி அவசியம் என்றது கீழ்ப் பாட்டில் -இதில் ஜ்ஞான அனுஷ்டான சம்பந்தனான ஆசார்யனைப் பணிந்தால் அன்றிப் பேறு பெற முடியாது என்கிறது வண்டுகளோ வம்மின் -அஞ்சிறைய மடநாராய் -பல காலும் பஷிகளை விளிப்பார்கள் உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்ம்ப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம — சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகு என்று -ஆசார்ய ஹ்ருதயம் ஸ்ரீ சூக்திகள் தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் -பிராட்டியின் புருஷகாரத்தாலே மோஷம் அளிக்க வல்லவன் -ஆயினும் சதாசார்யார்களை ஆஸ்ரயியாதார்க்கு பிராட்டியின் புருஷகாரமும் பலிக்க மாட்டாது என்று காட்டின படி ஆசார்ய ஆஸ்ரயணம் முக்யத்தைத்தை அருளவே தானே வைகுந்தம் தரும் -என்று பிராட்டி புருஷகாரம் இன்றி ஸ்வயமாகவே வீடு தந்து அருள்வன் என்று காட்டி அருளுகிறார் |