திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3944 | உபதேச ரத்னமாலை || 60 | தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு | பதவுரை Show / Hideஅம்புயை -அம்புஜத்திலே பிறந்த பிராட்டி -பத்மா கமலா போன்ற திரு நாமம் ஸ்வ தந்த்ரனை உபாயமாகத் தான் பற்றின போது இ றே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்கிற சூர்ணிகை முதலாக ஈஸ்வரனைப் பற்றுகை கிடைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி -என்கிற சூர்ணிகை நடுவாக -இது பிரதமம் ஸ்வ ரூபத்தைப் பல்லவிதமாக்கும்-புன்பு புஷ்பிதமாக்கும் -அநந்தரம் பல பர்யந்தமாக்கும் -எனபது ஈறாக ஆசார்ய நிஷ்டையே சரம உபாயம் என்று மிக அற்புதமாக அருளிச் செய்யப் பட்டு இருத்தலால் அவ்வர்த்த விசேஷம் இங்கே நிரூபிக்கப் படுகிறத-தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் -இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் -என்கிற ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ சூக்திகள் அனுசந்தேயம் – |