திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3920 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3920உபதேச ரத்னமாலை || 36
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால் பேதை மனமே யுண்டோ பேசு
பதவுரை Show / Hide
தெருள் உற்ற -யாதார்த்த ஞானிகள்
அருள் பெற்ற நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால் -ஆழ்வார் அருளை லபிக்கப் பெற்ற ஸ்ரீ மன் நாதமுனிகள் முதலாக உள்ள
நம் ஆசாரியர்களைத் தவிர –
கீழ்ப்பாட்டில் சஹாவாச யோக்யர் அல்லாதாரக் கழிக்கக் பட்ட பாவிகள் -நம் பூர்வாச்சார்யர்களின் பரம்பரையில் படிந்தவர்கள் அல்லர்
முதலாம் -சரியான பாடம் -முதலான பாடம் வெண்டளை பிறழும் -நாதமுனி முன்னான -பாட பேதம் -அது சம்ப்ரதாய பாடம் அன்று