திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3919 | உபதேச ரத்னமாலை || 35 | ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி | பதவுரை Show / Hideஆழ்வார்கள் ஏற்றமும் அருளிச் செயல் ஏற்றமும் குறையாதபடி அவற்றை வளர்த்து அருளின ஆசார்யர்களைப் பற்றி ப்ரஸ்தாவிக்கையாலே அப்படிப்பட்ட ஆசாரியர்களின் திரு உள்ளம் புண் படுமாறு சில த்ரமிட உபநிஷத் பாஹ்ய குத்ருஷ்டிகள் தோன்றி ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தூஷித்துக் கொண்டு இருந்ததனால் அவர்களுடைய சஹவாசமும் வர்ஜநீயம் என்று அருளிச் செய்கிறார் தாழ்வா -என்கிற பாடம் -சரியானது -தாழ்வாக -வெண்டளை பிறழும் |