திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3912 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3912உபதேச ரத்னமாலை || 28
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை
பதவுரை Show / Hide
நமக்கு வாழ்வு ஆன நாள் – நமக்கு விசேஷிதித்து உஜ்ஜீவன ஹேதுவான நாள்
ஏழ் பாரும் உய்ய -உலகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படி –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த விதத்தாய் இராமானுசன் -என்றும்
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -என்றும் சொல்லுகிறபடியே பெருமை மிக பொருந்தும் என்பதால் எதிராசர் உதித்து அருளும்
சித்திரையில் செய்ய திருவாதிரை -என்று அருளிச் செய்கிறார்