திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3902 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3902உபதேச ரத்னமாலை || பெரியாழ்வார் என்ற திரு நாமத்துக்கு காரணம் அருளிச் செய்கிறார் – 18
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும் பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்
பதவுரை Show / Hide
மூத்தவரும் இல்லாத போதும் -பெரிய பிரபந்தங்கள் அருளிச் செய்யாதவர் என்றாலும் –
நம் பட்டர் பிரானுக்கு நம் பெரியாழ்வார் என்கிற விருது – -மற்ற ஆழ்வார்கள் உடைய அபி நிவேசத்தில் காட்டிலும் –
எம்பெருமானுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்து -இவரது விஞ்சி எழுந்த பரிவு காரணமாக –
மங்களா சாசனம் செய்து அருளி யதாலேயே –
காதாசித்கமாக இல்லாமல் இதுவே யாத்ரையாக இருந்ததே இவருக்கு –