திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3896 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3896உபதேச ரத்னமாலை || திருமழிசைப் பிரான் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 12
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள்
பதவுரை Show / Hide
துய்ய மதி -பரிசுத்தமான மதியைப் பெற்ற
இவ் வாழ்வார் பேயாழ்வாரை அடி பணிந்து திருந்தினவர் ஆதலால் -துய்ய மதி பெற்ற -என்று அருளிச் செய்கிறார்
சப்த ரிஷிகள் மக நஷத்ரம் சுற்றி வர்த்திப்பதாகச் சோதிடர்கள் சொல்லுவார்கள் –
அதற்கு ஏற்ப நல் தவர்கள் கொண்டாடும் நாள் -என்று அருளிச் செய்கிறார்
தரணி என்னும் வடசொல் தாரணி என்று நீட்டல் பெற்றது