திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3856 | இராமாநுச நூற்றந்தாதி || 80 | நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே | பதவுரை Show / Hideநல்லார் பரவும் இராமாநுசன், Nallaar Paravum Iraamaanusan - ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய திரு நாமம், Thiru Naamam - திரு நாமத்தை நம்ப வல்லார் திறத்தை, Namba Vallar Thirathai - (தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே மறவாதவர்கள் எவர், Maravaathavargal Evar - மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ, அவர்க்கே, Avarkke - அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே எல்லா இடத்திலும், Ella Idaththilum - ஸகல தேசங்களிலும் என்றும், Endrum - ஸகல அவஸ்தைகளிலும் எத் தொழும்பும், Eth Thozhumbum - ஸகலவித கைங்கரியங்களையும் சொல்லால் மனத்தால் கருமத்தினால், Sollaal Manaththaal Karumaththinaal - மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும் சோர்வு இன்றியே செய்வன், Soarvu Indriye Seivam - பிரியாதே யிருந்து செய்வேன். |