திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3808 | இராமாநுச நூற்றந்தாதி || 32 | பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே | பதவுரை Show / Hideசெறு கலியால், Seru Kaliyall - (தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே வருந்திய, Varundhiya - துக்கப்பட்ட ஞாலத்தை, Naalaththai - பூமியை வண்மையினால் வந்து எடுத்து அளித்த, Vanmaiyinaal Vandu Eduthu Aliththa - தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும் அரும் அளித்த, Arum Aliththa - சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும் எங்கள், Engal - எமக்கு ஸ்வாமியுமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை அடைபவர்க்கு, Adaipavarkku - ஆச்ரயிக்கு மவர்களுக்கு பொருந்திய தேசும், Porundhiya Desum - ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம் பொறையும், Poraiyum - க்ஷமாகுணமும் திறலும், Thiralum - ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும் புகழும், Pugazhum - கீர்த்தியும் நல்ல திருந்திய ஞானமும், Nalla Thirundhiya Gnanamum - பரம விலக்ஷணமான அறிவும் செல்வமும், Selvamum - பக்தியாகி றஸம்பத்தும் சேரும், Serum - தானே வந்துசேரும். |