திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2574 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2574திருவிருத்தம் || 97
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு, எனை யூழிகள் போய்க் கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால், இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய், தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும், உண்டோ கண்கள் துஞ்சுதலே?
பதவுரை Show / Hide
எழுவதும், Ezhuvadhum - ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும், Meende Padivadhum - மறுபடி அஸ்தமிப்பதையும்
பட்டு, Pattu - இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள், Ennai Oozhigal - எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும், Poi Kazhithalum - சென்று கழிவதையும்
கண்டு கண்டு, Kandu Kandu - பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால், El Kal Allal - வருந்துதலே யல்லாமல்
இமையோர்கள் குழாம், Imaiyorkal Kuzham - தேவர்கள் கூட்டம்
தொழுவதும், Thozhivadhum - வணங்குவதையும்
சூழ்வதும், Sozhvadhum - (பரிவாரமாக,) சூழ்ந்து கொள்வதையும்
செய், Sei - செய்யப் பெற்று
தொல்லை மாலை, Thollai Maalai - ஆதியந்தம் இல்லாதவனான திருமாலை
கண் ஆரக் கண்டு, Kan Aarak Kandu - கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து
கழிவதோர் காதல் உற்றார்க்கும், Kazhivadhor Kaadhal Utrarkkum - (அவன் பக்கல்) மிக்க ஒரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்
கண்கள் துஞ்சுதல், Kangkal Thunzhuthal - கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ, Undo - உள்ளதோ? (இல்லை என்ற படி.)