திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2565 | திருவிருத்தம் || 88 | திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே? | பதவுரை Show / Hideமேரு, Meru - மஹாமேருமலையானது திருமால் உரு ஒக்கும், Thirumal Uru Okkum - திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும் அ மேருவில் செம் சடரோன், A Meruvil Sem Sadaron - அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன். திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும், Thirumal Thiru Kai Thiru Chakkaram Okkum - அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்; அன்ன கண்டும், Anna Kandu - (அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும். திருமால் உருவோடு அவன் சின்னமே, Thirumal Uruvodu Avan Chinname - அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும் (நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான. ஓர் திருமால், Or Thirumal - ஒப்பற்ற செல்வமாக வேட்கை தலைக் கொண்ட நங்கட்கு, Thalaik Konda Nankadkku - ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு தீ வினை, Thi Vinai - (பிரிவுக்குக் காரணமான) பாவம் எங்கே வரும், Enge Varum - எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.) |