திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2564 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2564திருவிருத்தம் || 87
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந் தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின் வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம் சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?
பதவுரை Show / Hide
திருமால், Thirumaal - பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும், Pulambum - (விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல், Kana Kural - கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும், Pozh Vaai Andrilum - பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும், Poo Kazhi Paayndhu Alambum - அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல், Kana Kural - கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும், Sool Thirai Azhiyum - சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை, Aangu Avai - அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக, Nin Valambulladhu Nalam Paadum Ithu Kuttram Aaga - உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை (இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி, Vaiyam Silambumpadi - உலகத்தார் முறையிடும்படி
இ திருவினை, I Thiruvinai - திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே, Seivadhe - துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)