திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2526 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2526திருவிருத்தம் || 49
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல் கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.
பதவுரை Show / Hide
காள வண்ணம், Kaala Vannam - கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய், Vandu Un Thuzhai - வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான், Perumaan - ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன், Madhusoodhanan Thamodharan - மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும், Undum - (பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும், Umizhndhum - (பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய, Kaday - பாதுகாக்கப்பெற்ற
மண், Man - பூமியினுடைய
ஏர், Aer - அழகை
அன்ன, Anna - ஒத்த
ஒள் நுதலே, Ol Nuthale - ஒளிபொருந்திய நெற்றியையுடையவளே!
பண்டும், Pandhum - முன்பும்
பலபல, Palapala - மிகப்பலவான
வீங்கு இருள், Veengu Irul - பெரிய இருட்பொழுதுகளை
காண்டும், Kaandum - பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல், I Bay Irulpol - இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம், Kandum Arivadhum Kaetpadhumyam Ilam - யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.