திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2524 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2524திருவிருத்தம் || 47
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே
பதவுரை Show / Hide
வடமாருதம், Vadamarudham - வாடைக்காற்று (- (ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே))
திரிகின்றது, Thirigindrathu - உலாவுகிறது;
திங்கள், Thingal - (குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம்  தீ, Vem Thi - கொடியநெருப்பை
முகந்து சொரிகின்றது, Mugandhu Sorikindrathu - வாரியிறைக்கின்றது:
அதுவும் அது, Adhuvum Adhu - முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய
விண் ஊர், Vin Oor - பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே, Thozhave - இடைவிடாது தொழுது அநுபவிக்கவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம், Sangam - (கையிலணிந்துள்ள) சங்குவளை.
சரிகின்றது, Sarigindrathu - கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaykku - (அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
முழு மெய்யும், Muzhu Meyyum - உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?, Vannam Payalai Virigindrathu - (இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம்பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு, En Melliyarku - மென்மையான தன்மையையுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - யாதாய் முடியுமோ.