திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2491 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2491திருவிருத்தம் || நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடி -நலம் பாராட்டு துறையில் அருளிச் செய்தது மூன்று காரணங்கள் அழகிலே ஈடுபட்டு பேசுவது விஸ்லேஷத்தில் தன்னுடைய தரிப்புக்கு நம்மைப் பிரிந்து நெடும்காலம் இருக்க மாட்டாமல் கடுக வந்திடுவார் என்று உணர நாயகியின் கண் அழகிலே ஈடுபட்டுப் பேசும் பாசுரம் இது 14
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே
பதவுரை Show / Hide
ஈர்வனவேலும், Eirvanvelum - (பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும், Am Selum - அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை, Ivai - இவை
உயிர்மேல் மிளிர்ந்து, Uyirmeel Milirndhu - (எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல, Pervanavo Alla - (அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம், Deivam - தெய்வத் தன்மையை யுடைய
நல், Nal - அழகிய
வேள், Vel - மன்மதனுடைய
கணை, Kanai - அம்புகளினுடைய
பேர் ஒளிய, Per Oliya - சிறந்த ஒளியையே
சோர்வன, Sorvan - தாம் வெளியிடுவன
நீலம், Neelam - நீலமணியினுடைய
சுடர், Sudar - ஒளியை
விடு, Vidu - வீசுகின்ற
மேனி, Meni - திருமேனியை யுடையனான
அம்மான், Amman - எம்பெருமானது
ஊர் விசும்பு, Oor Visumbu - திருநாடாகிய பரமபத்தை
தேர்வன, Thervan - (தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல், I Sezhu Kayal - கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ, Deivam Annira Kannno - (மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ, Kannno - கண்களோ?