திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2459 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2459நான்முகன் திருவந்தாதி || உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால் அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் – திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் – 78
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல் கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, – வண்டலம்பும் தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங் காரலங்க லானமையா லாய்ந்து.
பதவுரை Show / Hide
காமன்,Kaaman - மன்மதனுடைய
உடல்,Udal - சரீரத்தை
கொண்ட,Konda - நீறாக்கின
தவத்தாற்கு,Thavaththaarku - தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை,Umai - (மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த,Unartha - தெரிவிக்க,
அங்கு,Angu - அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை,Aar Alangkal Aanamai - மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்,Aayndhaal - ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே,Vandu Alambum Thaar Alangkal Neelmudiyana Than Peyarkettirundhe - வண்டுகள் ஒலிக்கப் பெற்றபூமாலயை நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு,Kandu Vananginaarkku - நேரேகண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்,En Aam Kol - எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)