திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2442 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்- தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று- 61 | மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு. | பதவுரை Show / Hideமதுசூதன் தன்னை,Madhusoodhan Thannai - மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை மனம் கேதம்,Manam Ketham - மனவருத்தங்கள் சாரா,Saraa - வந்துசேராவாம் ஒன்றி நின்று,Onri Nindru - பொருந்தி நின்று ஏழ் உலகை,Ezhu Ulagai - ஸப்தலோகங்களிலும் ஆணை ஒட்டினான்,Aanai Ottinaan - (தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான் இன்று,Indru - இப்போது தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்,Thanakke Thanjam Aa Thaan Kollil - தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால் சென்று,Sendru - (நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து ஒன்றி நின்ற திரு,Onri Nindra Thiru - (என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது எனக்கே தான்,Enakke Thaan - என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை. |