திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2437 | நான்முகன் திருவந்தாதி || இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் – அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும் தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி- அவன் தானே சாஷியாகத் தோற்றான் – 56 | அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், – உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு. | பதவுரை Show / Hideஅவர் இவர் என்று இல்லை,Avar Ivar Endru Illai - பெரியார் சிறியார் என்று ஒருவாசியில்லை அனங்கவேள் தாதைக்கு,Anangavel Thathaikku - காமனுக்குத் தந்தையான் கண்ணபிரானுக்கு எவரும்,Evarum - ஒருவரும் எதிர் இல்லை கண்டீர்,Edhir Illai Kandeer - எதிர் நிற்கவல்லாரில்லை காண்மின் உவரிக்கடல் நஞ்சம் உண்டான்,Uvarikadal Nanjam Undaan - கடலில் தோன்றின விஷத்தை உட்கொண்டவனான சிவன் வாணற்கு,Vaanarkku - பாணாஸுரனுக்கு கடன் என்று,Kadan Endru - ‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி உடன் நின்று,Udan Nindru - அவனோடு கூடவேயிருந்து ஒருங்கு தோற்றான்,Orungu Thotran - குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான். |