திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2413 | நான்முகன் திருவந்தாதி || அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் – ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன – ஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்– 32 | கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப்
பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி. | பதவுரை Show / Hideகதை பொருள்தான்,Kathai Porulthaan - (உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும் (- (அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)) உதைப்பு அளவு போது போக்கு இன்றி,Uthaippu Alavu Podhu Pookku Inri - ஒரு நிமிஷகாலமும் ஓயாமல் (எப்போதும்) கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய திரு வயிற்றின் உள்ள,Thiru Vayittrin Ulla - ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன, வாய்ந்த குணத்து,Vaayndha Gunaththu - திருக்கல்யாண குணங்களில் படாதது,Padaadhadhu - ஈடுபடாத வஸ்து வதை பொருள்தான்,Vadhai Porulthaan - அபதார்த்தமே யாகும், ஆய்ந்த குணத்தான்,Aayndha Gunaththaan - சிறந்த திருக்குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய அடி,Adi - திருவடிகளை அடைமின்,Adaimin - ஆச்ரயியுங்கோள் |