திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2410 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே- தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார் ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் – மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை – 29 | உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன். | பதவுரை Show / Hideமிக,Miga - மிகவும் புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்,Puruvam Ondruk Konru Osanaiyaan - ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன் வீழ,Veel - ஒழியும்படியாக அன்றிக் கொண்டு,Andrik Kondo - சீறிக்கொண்டு ஒரு கணையால்,Oru Kanaiyaal - ஒரு பாணத்தினால் எய்தானவன்,Eydhaanavan - அடித்து முடித்தவனான இராமபிரானை மதிக்கில்,Mathikkil - சிந்தித்தால் உகப்பு உருவன் தானே,Ugappu Uruvan Thaane - மநோஹரமான திருமேனியையுடையவன் அவனே ஒளி உருவன் தானே,Oli Uruvan Thaane - தேஜோமயமான திருமேனியை யுடையவனும் அவனே, மகப்பு உருவன் தானே,Makappu Uruvan Thaane - மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே. |