திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2396 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2396நான்முகன் திருவந்தாதி || இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில் ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் – 15
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம் மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை.
பதவுரை Show / Hide
பல தேவர்,Pala Thevar - பல தேவர்கள்
எந்த,Endha - துதிக்கும்படியாக
பழ,Pazha - பூமியை
கடந்தான்,Kadandhaan - அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்,Paatham - திருவடிகளிலே
மலர்,Malar - புஷ்பங்களை
ஏற இட்டு,Eera Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சி,Irainji - வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்,Vazhththa Valar Aagil - மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீற்கண்டன் கண்ட நிலை,Neerkandan Kanda Nilai - நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மாற்கண்டன் கண்ட வகையே,Maarkandan Kanda Vagaiye - மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்,Varum Kandeer - ஸித்திக்குங்கிடீர்