திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2364 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2364மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – 83
இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், இனியவன் காண்பரிய னேலும், – இனியவன் கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தி னுள்ளே யுளன்.
பதவுரை Show / Hide
இனி, Ini - இப்போது
அவன், Avan - ‘அந்தஸர்வேச்வரன்
மாயன், Maayan - மாயைக்காரன்‘
என, En - என்று
உரைப்பர் எனும், Uraippar Enum - சொல்லுவார்களே யாகிலும்,
இனி, Ini - இப்போது
அவன், Avan - அப்பெருமான்
காண்பு அரியன் எலும், Kaanbu Ariyan Elum - கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கன்னத்தாள், Kannaththaal - க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு, Man Konda - பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன், Vin Kadandha Pai Kazhalan Avan - ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி, Ini - இப்போது
உள்ளத்தன் உள்ளே உள்ள, Ullaththan Ullae Ulla - எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான் (இந்த பரமலாபமே போது மென்கை)