திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2348 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2348மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய சேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை அழகை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் – அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – 67
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், ஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில் பகரு மதியென்றும் பார்த்து.
பதவுரை Show / Hide
மால், Maal - ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய், Undhi Vaai - திருநாபியிலே
ஓங்கு, Ongu - உயரவளர்ந்த
ஒண் கமலத்தின் போது, On Kamalaththin Podhu - அழகிய தாமரைப் பூவானது
கை, Kai - அவனுடைய வலத்திருக்கையில்
ஆம், Aam - உண்டான
திகிரி, Thigiri - திருவாழியை
சுடர் என்றும், Sudar Endrum - ஸூர்யனென்றும்
(கை ஆம்), Kai Aam - இடத்திருக்கையிலுள்ள
வெண் சங்கம், Ven Sangam - வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும், Vaanil Pakarum Mathi Endrum - ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து, Paartthu - நினைத்துக்கொண்டு
ஆங்கு, Aangu - எக்காலத்திலே
மலரும் குவியும், Malarum Kuviyum - மலர்வதும் மூடிக்கொள்வதுமாயிரா நின்றது.