திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2288 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2288மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் – இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் – 7
கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், – எழிலளந்தங் கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை, நண்ணற் கரியானை நாம்.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenchae - ஓ மனமே!
கார் கடல் நீர், Kaar Kadal Neer - கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை, Vela - கரையையுடைத்தான
பொழில், Pozhil - பூமியை
அளந்த, Alandha - அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி, Pul Oorthi - கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன், Selvan - ஐச்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை, Ezhil Alandhu Ennaarku Ariyanai - அழகை எல்லைகண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை, Epporutkum Seyaanai - எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை, Nannarku Ariyaanai - (யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்,
வா, Vaa - நீயும் உடன் படுவாயாக.