திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2277 | இரண்டாம் திருவந்தாதி || உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது — இரண்டாலும் -ஸ்ரீ கருட வாகனத்வம் -ஸ்ரீ சேஷ சாயித்வம் -ஸ்ரீ சர்வேஸ்வரன் என்றபடி – உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர் என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் – 96 | அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான். | பதவுரை Show / Hideபுள்ளை ஊர்வான், Pullai Oorvaan - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும் அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான், Ani Maniyin Thuththiseer Naagaththin Mel Thuyilvaan - அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய் படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும் முத்தீ ஆவான், Mutthi Aavaan - மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும் மறை ஆவான், Marai Aavaan - வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான், Maa Kadal Nanju Undaan Thanakkum Irai Aavaan - பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான எங்கள் பிரான், Engal Piraan - எம்பெருமான் அத்தியூரான், Aththiyooran - ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான். |