திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2045 | திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று ஆனந்த பரவசராய்ப் பேசினவர், ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு, கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார். 14 | காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே | பதவுரை Show / Hideகாவியை, Kaaviyai - கரு நெய்தல் மலரை வென்ற, Vendra - தோற்பித்த கண்ணார், Kannaar - கண்களை யுடையரான மாதர்களினது கலவியே, Kalaviye - கலவியையே கருதி, Karuthi - நினைத்துக் கொண்டு நாளும், Naalum - அநாதி காலமாக பாவியேன் ஆக எண்ணி, Paaviyen Aaga Enni - மஹா பாபியாகும்படி மநோ ரதித்து அதனுள்ளே, Adhanulle - அந்தப் பாவப் படு குழியிலேயே பழுத்தொழிந்தேன், Pazhuthozhindhen - பரி பக்குவனாய் விட்டேன; தூவி சேர், Thuvi Ser - (அழகிய) சிறகையுடைய அன்னம் மன்னும், Annam Mannum - அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற சூழ் புனல், Sozh Punai - சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான குடந்தை யானை, Kudandai Yaanai - திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை பாவியேன், Paaviyen - பாவியான நான் பாவியாது, Paaviyaadhu - சிந்தியாமல் பாவியேன் ஆயினேன், Paaviyen Aayinenn - (மேலும்) மஹா பாபியானேன். |