திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2035 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2035திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக. மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப் பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்; விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது; இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார். 4
கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட, பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு, வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!
பதவுரை Show / Hide
யான் கேட்க உற்றது உண்டு, Yaan Kaetka Utrathu Undu - அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்ற மருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய், Kezhal Aay - வராஹரூபியாகி
உலகம் கொண்ட, Ulagam Konda - பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை, Poo Kezhu Vannanaarai - பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு, Kanavil Podhara Kandu - கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால், Vaakkinaal Karumam Thannal Manathinaal - மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால், Sirathai Thannal - ச்ரத்தையோடு
வேட்கை மீதுர, Vedkai Meedhura - ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு, Vaangi Vizhunghinairku - பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே, Iniya Aarae - போக்யமாயிருக்கிறவிதம் என்னே!