திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2032 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து, என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்– 1 | நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே! | பதவுரை Show / Hideநிதியினை, Nithiyinai - (அன்பர்கட்கு) நிதிபோன்றவனும் பவளம் துணை, Pavalam Thunai - பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும் நெறிமையால், Nerimaiyaal - ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும் முன், Mun - முன்பு கஞ்சன் மாளகண்டு, Kanjan Maalakandu - கம்ஸன் முடிந்து போம்படி செய்து அண்டம், Andam - உலகங்களை ஆளும், Aalum - ரக்ஷித்தருளினவனும் மதியினை, Madhiyinai - (அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும் மாலை, Maalai - அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும் வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை, Vaazhththi Vanangi En Manaththu Vanda Vidhiyinai - நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை கண்டு கொண்ட, Kandu Konda - ஸேவிக்கப் பெற்ற தொண்டனேன், Thondanen - அடியேன் விடுகிலேன், Vidugilena - (இனி ஒருநாளும்) விடமாட்டேன். |