திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2024 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே – இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும் இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன் சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் – இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி – இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது) 3 | தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா –11-8-3 | பதவுரை Show / Hideஎன் தாமரை கண்ணா, En Thaamarai Kannaa - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எனது தலைவனே! தூங்கு ஆர் பிறவிக்கள், Thoongu Aar Piravikkal - சஞ்சலம் மிக்க பிறப்புக்களிலே இன்னம் புகபெய்து, Innam Pugapeythu - (இதுவரைபட்டது போதாமல்) இன்னமும் புகும்படி போட்டு வாங்காய் என்று சிந்தித்து, Vaangai Endru Sindhithu - என்னை மீட்காதிருந்திடுவையோ? என்று கவலை கொண்டு நான் அதற்கு அஞ்சி, Naan Atharku Anji - நான் அப்பிறவித்துன்பத்திற்கு அச்சமுறுதலால் பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப்போல், Pambodu Oru Kooraivile Payinraappol - பாம்பினுடனே ஒருவீட்டிலே பழகி வசிப்பதுபோல தாங்காது உள்ளம் தள்ளும், Thaangadhu Ullam Thallum - (பல பொல்லாங்குகட்கு இடமான உடலோடுகூடி வாழ்தலைப்) பெறாமல் என்மனம் தடுமாறுகின்றது. |