திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1974 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் – தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் – இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை – உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்) 3 | அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3 | பதவுரை Show / Hideஅன்னே, Annee - அஹஹ! இவரை ஆறிவன், Ivaarai Aarivan - இந்த மஹாநுபாவரை (நான் நன்கு) அறிவேன் இவர், Ivar - இப்பெரியவர் முன்னே, Munne - முற்காலத்திலே மறை நான்கும், Marai Nankum - நால் வேதங்களையும் உரைத்த, Uraiththa - (நான்முகனக்கு)உபதேசித்த முனிவர், Munivar - முனிவராவர் வந்து, Vandhu - (ஒருகால் என்பக்கலில்)வந்து பொன் ஏய் வளை கவர்ந்து, Pon Ey Valaikavarnthu - பொன்மயமான கைவளைகளை விரும்பி மனம் புகுந்து, Manam Pugunthu - எனது நெஞ்சினுள் புகுந்து போகார், Pogaar - விட்டுப்போகாமலிராநின்றார் இவர் எண்ணும் எண்ணம், Ivar Ennum Ennam - இவர் நினைத்திருக்கும் நினைவு என்னே, Enne - எதுவாயிருந்ததோ? அறியோம், Ariyom - அறிகின்றிலோம் |